Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயலட்சுமிக்கு கல்யாணம்

விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.  ’சென்னை 600028’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி, மிஷ்கினின் ‘’அஞ்சாதே’, ’சரோஜா’, ’அதே நேரம் அதே இடம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

’ஈரம்’, ‘வல்லினம்’ படங்களின் இயக்குநர் அறிவழகனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஃபெரோஸ் என்பவரை மணக்க இருக்கிறார். இது குறித்து விஜயலட்சுமி கூறுகையில் விரவில் ஃபெரோஸ் படம் இயக்க உள்ளார். எங்கள் குடும்பத்தார் இந்த வருடத்திற்கு பிறகு திருமணம் செய்து வைக்க உள்ளனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக விரைல் அறிவிப்பேன். 

அகத்தியனும் விஜயலட்சுமியை நடிப்பிலிருந்து நிறுத்திவிட்டு தயாரிப்பாளராக மாற்ற முடிவு செய்துள்ளார். விரைவில் விஜயலட்சுமியின் தயாரிப்பு நிறுவனமான ‘டீ டைம் டாக்ஸ்’ மூலம் சி.எஸ்.அமுதனின் ‘ரெண்டாவது படம்’ என்னும் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்