Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனன்யாவுக்கு கல்யாணம்!

'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தனன்யா. தனது முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை கொடுத்திருந்தாலும் அடுத்தடுத்து படங்கள் ஏதும் அமையவில்லை. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'அங்காடித் தெரு' மகேஷ் ஹீரோவாக நடித்துள்ள 'வெயிலோடு விளையாடு' படத்தில் நாயகியாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை.

 

மருத்துவரான தனன்யா இப்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டார். இவருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த நரம்பியல் துறை டாக்டர் விக்ரம் ஆர்யனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இவர்கள் திருமணம் வருகிற மே 1-ம் தேதி, ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடக்க உள்ளது. தனன்யாவின் அம்மா, அப்பா இருவரும் கூட மருத்துவர்கள் தான்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்