Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரியாமணிக்கு விரைவில் திருமணம்

 ’உள்ளம்’ என்னும் படம் மூலம் தமிழில் எண்ட்ரியானவர் பிரியாமணி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் அறியப்பட்டவர் அமீரின் ‘பருத்தி வீரன்’ படம் மூலம் தேசிய விருதையும் வென்றார். 

அதைத்தொடர்ந்து தமிழ் , தெலுங்கு என ப்ரியாமணி பல டாப் ஹீரோக்களுடன் நடித்தார். தற்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளாராம். தொழிலதிபரும் , பிரியாமணியின் நீண்ட கால நண்பரும் ஆன முஸ்தபா ராஜை மணக்க இருக்கிறாராம். 

என்னை மிகவும் கவனமாகவும், அன்போடும் பார்த்துக் கொள்பவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறிய ப்ரியா மணி, மலையாள பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில்தவறுகளை தைரியமாக ஒப்புக்கொள்ளும் குணமுடையவரையே நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன். இது மட்டும் அல்லாமல் எனது பிரச்னை எதுவாக இருப்பினும் என்னுடன் நிழலாக நிற்பவர் , நல்ல ஹியூமர் சென்சும் அவரிடம் இருக்கிறது என ஓபனாக கூறியுள்ளாராம். 

சாந்தனு , த்ரிஷா,  இலியானா, தனன்யா என லிஸ்டில் இப்போது ப்ரியா மணியும் இணைந்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close