Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வில் அம்பு படத்தில் ஜி.வி. பிரகாஷ் , அனிருத் குரல்களில் பாடல்கள்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத். இருவரின் குரல்களிலும் பல பாடல்கள் படத்தின் புரமோஷன் பாடல்களாக படங்களில் இணையத் துவங்கியுள்ளன. ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் , சைந்தவி தம்பதி சகிதமாக வெண்மேகம் பாடலை பாடினார்கள். அப்பாடல் ஹிட்டானது.

அதே போல் அனிருத் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஐ’ பட மெர்சலாயிட்டேன் பாடல், ‘ரோமியோ ஜூலியட்’ டண்டனக்கா என  பாடல்கள் பாடி அப்பாடல்கள் மெகா ஹிட்டாகின. இந்நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் படம் ’வில் அம்பு’.

இப்படத்தை ரமேஷ் சுப்ரமணியன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு நவின் இசையமைத்து வருகிறார். இதில் ஜி.வி மற்றும் அனிருத் இருவரும் ஒவ்வொரு பாடல் பாட உள்ளனர். சமீபத்தில் தான் அனிருத் தன் பாடலை பாடி கொடுத்துள்ளார்.

ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், ஸ்ருஷ்டி டாங்கே, சம்ஸ்கிருதி, சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் போஸ்டர் , மோஷன் போஸ்டர் முறையே, விஷால், காஜல் அகர்வால் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்