Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்தடுத்து வெளியாகும் கமல் படங்கள்! ஜூனில் பாபநாசம்

’உத்தமவில்லன்’ படத்திற்குப் பிறகு பாபநாசம் படத்தை ஜூன் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.

கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடிப்பில் மே 1ல் வெளியாகவிருக்கும் படம் ’உத்தமவில்லன்’. இப்படத்தினைத் தொடர்ந்து “பாபநாசம்” ஜூன் மாதம் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

மோகன்லால், மீனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் மலையாளத்தில் வெளியான “த்ரிஷ்யம்” திரைப்படத்தின் ரீமேக்கே பாபநாசம். மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப் தான் தமிழிலும் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே வெங்கடேஷ், மீனா நடிப்பில் தெலுங்கிலும், வி.ரவிசந்திரன், நவ்யா நாயர் நடிப்பில் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டாகியுள்ளது. அனைத்து மொழிகளுக்கான உரிமையும் ராஜ்குமார் தியேட்டர் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாபநாசம் வேலைகள் முடிந்து வெளியிட தயாராகிவிட்டன. மே மாதம் உத்தமவில்லன், ஜூனில் பாபநாசம், அதைத் தொடர்ந்து விஸ்வரூபம் 2ம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close