Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வடிவேலுவின் அடுத்த ப்ளான்!

 யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு, சதா நடித்து வரும் படம் ‘எலி’. துப்பறியும் சீக்ரெட் ஏஜெண்டாக 60-70களில் நடக்கும் கதையாக உருவாகி வருகிறது. இந்நிலையில் வடிவேலுவின் அடுத்த படம் குறித்து தகவல்கள் கசிந்துள்ளன. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க இருந்த ‘தெனாலிராமன்’ படத்தை தயாரிக்க யாரும் முன்வராத நிலையில் ஏ.ஜி.எஸ் சினிமா நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டனர். 

எனினும் அந்தப் படம் எதிர்பார்த்த கமர்ஷியல் ஹிட் கொடுக்கவில்லை. இந்நிலையில் ‘எலி’ படத்திற்கு பிறகு மீண்டும் வடிவேலு ஹீரோவாக நடிக்க உள்ள படத்தை முக்கிய இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளாராம். அந்த படத்தை மீண்டும் ‘ஏ.ஜி’எஸ். நிறுவனமே தயாரிக்கிறது. இப்படம் குறித்த அறிவிப்பு ‘எலி’ பட நிறைவிற்கு பிறகு வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்