Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாண்டிராஜை பாராட்டிய சுசீந்திரன்!

பசங்க படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பாண்டிராஜ். தொடர்ந்து மெரினா, கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அடுத்ததாக சிம்பு நடிப்பில் இது நம்ம ஆளு படம் தொடங்கப்பட்டு இன்னும் வெளிவராத நிலையில் உள்ளது.

இதற்கு நடுவே சிறார்கள் சார்ந்த ஹைக்கூ என்ற படத்தின் முக்கால் பாகம் வேலையை முடித்துவிட்டார். இப்படத்தினை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

ஹைக்கூ படத்தின் டீசரை சமீபத்தில் அவரின் சினிமா வட்டார நண்பர்களில் ஒருவரான பிரபல இயக்குநர் சுசீந்திரனுக்கு மட்டும் திரையிட்டிருக்கிறார். படத்தினைப் பார்த்துவிட்டு , “ கவிதையை திரையில் கண்டது போல இருக்கிறது. இந்தப் படத்தினைப் பார்க்கும் ஆர்வத்தில் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் சுசீந்திரன்.

பசங்க படத்தினைப் போலவே ஹைக்கூவும் சிறுவர்களுக்கான மாறுபட்ட கதைத்தளமே. வித்தியாசமான தாக்கத்தை கண்டிப்பாக பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் என்று என்று முனுமுனுக்கிறது சினிமா வட்டாரம். அதுமட்டுமில்லாமல் பிந்துமாதவி, அமலாபால் மற்றும் சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது சிறப்புச் செய்தி.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close