Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெய்-திரு படத்தில் டாப்ஸி, சமுத்திரகனி, சோனியா !

பல்வேறு மாற்றங்களுக்கு நடுவில் ஜெய் - திரு படம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. 'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் திரு. இவரின் அடுத்தப் படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார்.

ஆரம்பத்தில் ஜெய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக அறிவித்தனர். தற்பொழுது அவருக்குப் பதிலாக டாப்ஸி நடிக்கவிருக்கிறார். அதேபோல பிரபுதேவா ஜெய்க்கு அண்ணனாக நடிப்பதாக இருந்தது. பின்னர் அவருக்குப் பதிலாக சமுத்திரக்கனி நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் டாப்ஸிக்கு சகோதரியாக சிம்ரனிடம் பேசினர். ஆனால் சோனியா அகர்வால் நடிப்பதாக உறுதியாகியிருக்கிறது.

பெயரிடப்படாத இந்தப் படத்தை ஃபிலிம் டிபார்ட்மண்ட் சுஷாந்த் பிரசாத்தும் ரேடியன்ஸ் மீடியா வருண்மணியனும் இணைந்து தயாரிக்கின்றனர். முதல் கட்டப்படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கவுள்ளது. தமன் இசையமைக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close