Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“தல எப்போதுமே மாஸ் தான்” - தல ஸ்பெஷல் !

என்னடா இது இன்னிக்கு எங்க பார்த்தாலும் தல அஜித்தோட போஸ்டர் கட் அவுட்டா இருக்கே,!!!  தலையுடைய அடுத்த படம் ஏதாவது ரிலீஸ் ஆயுடுச்சான்னு? யோசிச்சிக்கிட்டே டீவியை ஆன் பண்ணினா,  எந்த சேனல் போட்டாலும் தலையோட பாட்டா இருக்கே , அட இன்னிக்கு தல பிறந்தநாளுன்னு நினைச்சுட்டு , சும்மா பக்கதுல இருக்கற கடைக்கு போனா ! அங்க ஒரு கூட்டமே தலை அஜீத்தை பத்தி பெருமையா பேச, அப்படி என்ன தான் பேசுறீங்க,   கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்னு! கேட்டதுக்கு , நான் நீன்னு போட்டி போட்டுகிட்டு வர! அதிலிருந்து ஒரு மூன்று பேரை கூப்பிட்டு கேட்டோம்... அவங்க என்ன சொன்னாங்கனு நீங்களே படிங்க!     

தலஅஜித்”! அட இவரை பத்தி சொல்லணும்னா ஒரு நாளே போதாதுன்னு ஆரம்பிச்சார் பிரேம்கிருஷ்ணா “ நா தலையுடைய டை  ஹர்ட் ஃபேன்னு சொல்றதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எனக்கு அவர்கிட்ட பிடிச்சது.... ம் ம் ம் னு யோசிக்க.. அட அவர்கிட்ட எது தான் பிடிக்காது?, அவரு நடக்கற ஸ்ட்டைல சொல்லாட்டா, பைக் ஓட்டுற ஸ்ட்டைல சொல்லட்டா? இல்ல அவரு கேரக்டரை சொல்லட்டா? எனக்கு அவர்கிட எல்லாமே பிடிக்கும்; குறிப்பா சொல்லணும்னா அவருடைய ஹார்டுவெர்க், டெடிகேஷன், தன்னம்பிக்கை, எல்லாமே ரொம்ப பிடிக்கும். எவ்வளவு கஷ்டம்  உடலளவிலும், மனதளவிலும் வந்தாலும் அதையும் எதிர் கொண்டு, அதையும் தாண்டி உழைத்தால் வெற்றி நிச்சயம் நம் கையில்தான் என்ற வாக்கிற்க்கு சரியான மாமனிதர் அவர் தான்.

அதே போல அவர் இது வரைக்கும் 55 படங்கள் நடிச்சு இருக்காரு, எந்த படம் நடிச்சாலும் எங்க மனசுல தல மட்டும் தான் நிப்பாரு. அவருக்கு எல்லா கேரக்டரும் செமையா செட்ஆகும். அந்த அந்த கேரக்டராவே மாறி அவருடைய பெஸ்டை குடுப்பது அவருடைய ஸ்பெஷாலிட்டி. உதாரணத்துக்கு வீரம் படத்துல ஒரு வில்லேஜூ கேரக்டர், அப்புறம் பில்லா படத்துல இண்டர்நேஷனல் டாண் கேரக்டர், அதேபோல என்னை அறிந்தால் படத்துல போலீஸ் கேரக்டர், பில்லா படத்துல ஒரு நெகட்டிவ் கேரக்டர் ( வில்லன்) . இப்படி எந்த கேரக்டர்  பண்ணினாலும் அதை நாம் ரசிக்கிறோம்ல, அவர் நடிக்கற ஒவ்வொரு படத்தையும் நாம் ரசிக்கிறோம்ல அங்க தான் எங்க தல நிக்கிராறு!! 

அவருடைய படம் ரிலீஸ் ஆச்சுன்னா போதும் எப்படியாச்சும் அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கி படம் பாக்கலன்னா தூக்கமே வராது. என்னை அறிந்தால் படம் ரிலீஸ் அப்போ கரெக்டா கல்லூரி தேர்வு ” வந்துடுச்சு, பிராக்ட்டிக்கல்ஸ் போனாலும் பரவாயில்லைனு friendsஓடஎக்ஸாமை கட் அடிச்சுட்டு படத்துக்கு போனோம். நானும் தல அஜித் படத்தை தவிர வேற யாரோட படத்தையும் theratreல போய் பார்த்ததா சரித்திரமே இல்ல. lifeல ஒரு தடைவையாச்சும் தல அஜீத்தை பார்க்கணும்னு ஒரு கனவு இருக்கு, அது dream ஆகவே போகாம நிஜமாகணும்னு  ஒரு நப்பாசை தான்னு!”  கூற பெருமூச்சு விட்டு ஹப்பா முடிஞ்சுதான்னு கேட்க, அவருக்கு ஒரு பைபை சொல்லிட்டு அடுத்து யாருன்னு பார்க்கலாம்.

நான் சொல்றேன்னு ப்ரியா சொல்ல, சரி சொல்லுங்கனு பாஸ் “ தலையோட ஸ்பெஷாலிட்டியே அவருடைய பைக் ரேசிங், கார் சேஸிங் தான். கார் ஓட்டுற நடிகர்னு உலகத்திலேயே 14வது இடமும், இந்தியாவிலேயே முதல் இடமும் எங்க தல அஜித்துக்கு தான். இப்போ கூட புது BMW8 ரேஸ் கார் பாத்தீங்கல்ல? செம கெத்தா இருந்துச்சுல்ல? ன்னு அவங்களே கேட்டு, பதிலும் அவங்களே சொல்ல, அட அவர் பைக்ல ஏறி உட்கார்ர அழகே தனி அழகு, அப்படியே கொஞ்சம் இடம் குடுத்தா நல்லாதான் இருக்கும்ல்ல... !!! ச்சா... அவ்வளவு ஸ்ட்டைலிஷ், அவ்வளவு handsome!!  உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன், தலயோட ‘ஆரம்பம்’ படத்துல அவரு ducatibike வச்சு இருந்தாருல, அதை பார்த்துட்டு நானும் அந்த பைக் ஓட்டனும்ன்னு அண்ணாவோட ஃப்ரெண்டு வச்சு இருந்த பைக்கை கால்ல விழாத குறையா கேட்டு ஓட்டலாம்னு வாங்கினேன், ஆனா பைக்கை வாங்கி உக்காந்ததுமே செம weightu, ஐயோ நான் காலின்னு நினைச்சு ஸ்டார்ட் பண்ணினதுமே அப்படியே பேலன்ஸ் மிஸ் ஆகி கீழஸ்லிப் ஆகிட்டேன். நல்லவேளை பைக்குக்கு ஒண்ணும் ஆகல!!, தல கூடத்தான் ducati பைக்ல போகமுடியல, அட்லீஸ்ட் அந்த மாதிரி பைக்லயாச்சும் உட்கார்ந்தோமேனு சந்தோஷப்பட்டேன்.

அதுமட்டும் இல்ல தல அஜித் பத்தி ஸ்கூல் புக்ல வந்து இருக்கு தெரியுமா? எங்க தலைய பத்தி 5ம் க்ளாஸ் சிபிஎஸ்சி பாடத்துலயே வந்து இருக்கு. அது என்னன்னா உலகிலேயே விமான உரிமம் உள்ள  ஒரே நடிகர் இவர் மட்டும் தான். ஸ்கூல் புக்ல கூட எங்க தல பேரு வருது!! வேற என்னங்க வேணும்? “தல! யூ ஆர் ஆல்வேஸ் கிரேட்”  ஐ லவ் யு தல” னு சொல்லி தல புராணத்தை ஒருவழியாக சொல்லி முடித்தார் பிரியா.

தல  ஸ்கிரீன் ஹீரோ மட்டும் இல்ல, அவரு ஆப் ஸ்க்ரின்லயும் ஹீரோ தான்னு தலையோட புகழ் பாட ஆரம்பித்தார் தினேஷ், “அவருடைய கேரக்டர், அவருடைய சிம்பிளிசிட்டி, அவருடைய உதவுகிற குணம் இதெல்லாம் எனக்கு அவரை ரோல் மாடல்லாகவே மாத்திடுச்சு. ஓவர்சீனோ, பந்தாவோ இல்லாத நடிகர். அதுமட்டும் இல்ல அவருடைய ஹார்டுவக்குர்க்கு ஒரு அளவே இல்ல. அவருக்கு லைப்ல எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அத ஒரு தடவை கூட வெளியே காட்டினது இல்ல. நமக்கு  எவ்வளவு வலிஇருந்தாலும் கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைச்சா கண்டிப்பா ஒருநாள் வெற்றி பாதையை அடைஞ்சுடலாம், என்பதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு தான் தல. எந்த ஒரு சினிமாபின்புலமும்  இல்லாம கஷ்டப்பட்டு வந்து இருக்காரு கோர்ட்சூட் மா....!!  ப்பா.... கோர்ட்சூட் போட்டு தல வந்தா பக்கதுல யாருமே நிக்கமுடியாது, அவ்வளவு மாஸ், அதே மாதிரி இந்த வயசுலையும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் வச்சாலும் கலக்கலா தெரியறது நம்ப தல மட்டும் தான்.!!

அதே மாதிரி அவருடைய ஸ்பெஷாலிட்டியே அவருடைய ஒரிஜினாலிட்டி தான். அவருக்குனு ஒரு தனி வழி அமைச்சு, அதுல கோடிக் கணக்கான ரசிகர்களையும் அவர்பாதையில் இட்டு செல்கிறார். படையப்பா படத்துல ரம்யாகிருஷ்ணன் ஒரு டயலாக் ரஜினி சாரை பார்த்து சொல்லுவாங்க “ வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு போகவே இல்லன்னு,”  அது ரஜினி சாருக்கு மட்டும் பொருந்தாது, நம்ப தால அஜித்துக்கும் தான் பொருந்தும். அவரை வாழ்த்த வயது இல்லை, வணங்குகிறேன். ஹாப்பி பர்த்டே தல!” என்று சொல்ல”,  முடிஞ்சுதான்னு கேட்க, “வேணும்னா சொல்லுங்க நான் இன்னும் சொல்லிகிட்டே போவேன்னு தினேஷ் சொல்ல” அட இதுவே நிறைய சொல்லிட்டிங்க!! போதும்பானு சொல்லிட்டு அங்கிருந்து வீட்டுக்கு வந்தேன். 

ப்பா.. இவங்க தல பத்தி சொல்ல சொல்ல நானே மெரசலாயிடேன், எப்போ எனக்கு தல மேல ஒரு க்ரேஸ் வந்துடுச்சுப்பா!!! எப்படியோ கோடி கணக்கான ரசிகர்களை சாம்பாதித்து இருக்கும் தல நூறு வயது வரை வாழ எங்கள் வாழ்த்துகள்.!!

சு. கற்பகம், மாணவ பத்திரிகையாளர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close