Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளியானது 'உத்தம வில்லன்'... ஞானவேல்ராஜாவிற்கு லிங்குசாமி நன்றி!

 ஒருவழியாக பிரச்னை முடிந்து உத்தம வில்லன் வெளியாகியுள்ளது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பூஜா குமார், ஆண்ட்ரியா, உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘உத்தம வில்லன்’ தயாரிப்பாளர் லிங்கு சாமிக்கும், பைனான்சியருக்கும் இடையில் நடைபெற்ற பிரச்னை காரணமாக படம் நேற்றே வெளியாக இருந்தது தள்ளிப்போடப்பட்டது. 

டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து ஏமாற்றம் அடைந்ததுடன் ஒருசில இடங்களில் ரகளையிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, டிக்கெட்டுக்களுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் ரசிகர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது. உத்தம வில்லன் திரைப்படம், பைனான்ஸ் பிரச்னையால் திரையிடப்படுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளருக்கும், பைனான்சியர்களுக்கும் இடையே சென்னையில் உள்ள பிலிம்சேம்பரில் பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை, பகல் முழுவதும் நீடித்தது. இருந்தாலும் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. சரத்குமார் , பைனான்சியர் அன்பு உள்ளிட்ட பலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்து சுமூகமான பேச்சுவார்த்தையில் இன்று முடிவுக்கு வந்துள்ளது. 

லிங்குசாமி பேசுகையில், இப்படம் தாமதம் ஆனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படம் வெளியானதற்கு ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா பேருதவி செய்துள்ளார். அவருக்கு என் நன்றிகள். இந்த உதவியை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். இன்று மதியம் முதல் படக்காட்சிகள் துவக்கம் என அறிவித்தார். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close