Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டு புறம்போக்குகளின் கதை!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கழுகு கிருஷ்ணா, ஸ்வாதி, தீபா சன்னிதி ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் படம் “யட்சன்”.

பட்டியல், சர்வம், ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து ஆர்யா - விஷ்ணுவர்தன் கூட்டணியில் வெளியாகவிருக்கும் ஐந்தாவது படம். இரண்டு நண்பர்களின் நட்பு மற்றும் அதை சார்ந்த கதைத் தளமே யட்சன். காமெடி, ஆக்‌ஷன் மற்றும் ரொமான்ஸ் என்று உருவாகிவருகிறது.

அதுமட்டுமில்லாமல் கழுகு நாயகன் கிருஷ்ணா தன்னுடைய சகோதரனின் இயக்கத்தில் முதன் முறை நடித்திருக்கிறார். விஷ்ணுவர்தனின் அனைத்துப் படங்களுக்கும் இசையமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜாவே இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.  ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

விஷ்ணுவர்தன் கூறும் போது, “ இரண்டு புறம்போக்குகளின் கதை. அவர்களின் நட்பு, காமெடி, ஆக்‌ஷன், ரொமான்ஸ் என எல்லாமே இருக்கும். முதன் முறையாக என் தம்பியை வைத்து இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது, அதுமட்டுமில்லாமல் ஆர்யாவை வைத்து படம் ஆரம்பிக்கும் போது இருக்கும் புத்துணர்வு படம் முடியும் வரையிலும் இருக்கும். அந்த அளவுக்கு எங்களுக்குள் புரிதல் இருக்கிறது. கடைசி கட்ட பணிகள் நடந்துவருகிறது. விரைவில் படத்தை எதிர்பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.

படத்தை விஷ்ணுவர்தனுடன் இணைந்து யுடிவி மோஷன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது.

யட்சன் பட ஆல்பத்திற்கு: http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4168

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close