Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜோதிகாவிற்காக விட்டுக் கொடுத்த சூர்யா!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடிப்பில் மே 15ல் வெளியாகவிருக்கும் படம் “36 வயதினிலே”. அதற்கு அடுத்தவாரமே சூர்யா நடிப்பில் மாஸ் ரிலீஸாகவிருக்கிறது.

மலையாளத்தில் மஞ்சுவாரியார் நடிப்பில் வெளியான “ஹவ் ஓல்டு ஆர் யூ” படத்தின் தமிழ் ரீமேக் படமே “36 வயதினிலே”. ஜோதிகா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ரகுமான், அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ரோஷன் ஆண்ட்ரூஸ் இப்படத்தினை இயக்கியுள்ளார். இவரே மலையாளத்திலும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தினைத் தயாரிக்கிறது.

இதைத் தொடர்ந்து மே22ல் சூர்யா நடிப்பில் மாஸ் படம் வெளியாகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நயந்தாரா, ப்ரனிதா, ஜெயராம், பார்த்திபன், சமுத்திரகனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் யுவன் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினைத் தயாரிக்கிறது.

மாஸ் படத்தின் இசை மே 8ல் வெளியாகிறது. முன்னதாக மே 15ல் தான் மாஸ் வெளியாவதாக இருந்தது. பின்னர் ஜோதிகாவின் படத்திற்காக ஒருவார இடைவெளியில் மே 22ல் மாஸ் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த வாரங்களில் சூர்யா - ஜோதிகா படங்கள் வெளியாவதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்