Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜீத் படப்பிடிப்பு நாளை மறுநாள் தொடங்குகிறது.

சிறுத்தைசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தின் கதையின் சில பகுதிகள் கொல்கத்தாவில் நடப்பதுபோல் இருக்கிறதாம். அதனால் படப்பிடிப்பையும் அங்கேயே நடத்தலாம் என்று முதலில் பேசினார்களாம்.

ஆனால் நிறையநாட்கள் அங்கே போய்ப் படப்பிடிப்பு நடத்தும் செலவைவிட இங்கேயே கொல்கத்தா மாதிரி செட் போட்டு எடுப்பது குறைவாக இருக்கும் என்று கணக்குப்போட்டிருக்கிறார்கள். செலவைக் காட்டிலும் அலைச்சலும் குறைவு அதோடு வேலையும் வேகமாக முடிவடையும் என்பதால் இங்கேயே செட் போட்டுவிட்டார்களாம். செட் போடுவதற்காகப் பல இடங்களைத் தேடிக் கடைசியில் பெரம்பூர் பின்னிமில்லைப் பிடித்திருக்கிறார்கள்.

இப்போது மிகப்பெரிய செட் தயாராகியிருக்கிறதாம். நாயகன் படத்தில் சென்னையிலேயே மும்பையை உருவாக்கியது போல இந்தப்படத்துக்குச் சென்னையிலேயே கொல்கத்தாவை உருவாக்கிவிட்டார்களாம்.
முதலில் மே ஆறாம்தேதி படப்பிடிப்பு தொடங்குவதாகச் சொல்லப்பட்டது.

அதன்பின் ஒருநாள் தள்ளிவைத்திருக்கிறார்கள். அதற்கு, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் சென்டிமெண்ட் காரணம் என்று சொல்கிறார்கள். சாய்பாபா பக்தரான அவருக்கு வியாழக்கிழமைதான் உகந்தநாளாம். எனவே மே ஏழு முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
 
           
 
 
 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close