Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணிரத்னம் நலமாக இருக்கிறார்.

இயக்குநர் மணிரத்னத்துக்கு திடீர் நெஞ்சுவலி, டில்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன.

இதுபற்றி இயக்குநர் மணிரத்னம் தரப்பில் கேட்டால், அது முற்றிலும் தவறான செய்தி என்கிறார்கள். அப்படியானால் சரியான செய்தி என்ன? மணிரத்னம் தன்னுடைய குடும்பத்துடன் கோடைக்கொண்டாட்டத்துக்காக டில்லி சென்றிருக்கிறாராம். ஒரு வாரம் அங்கு சுற்றிவிட்டு வருவதாகத் திட்டம் என்கிறார்கள்.

வழக்கமான மருத்துவபரிசோதனைகளுக்குக்கூட நேரமின்றி ஓகாதல்கண்மணி படவேலைகளில் மணிரத்னம் இருந்திருக்கிறார். இதனால் டில்லி போன நேரத்தில் மணிரத்னத்திடம்கூடச் சொல்லாமல் அவருக்கு ஒரு முழுஉடல் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துவிட்டாராம் சுகாசினி.

வழக்கமான பரிசோதனைகளுக்கு மணிரத்னம் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் பயணம் போன இடத்தில் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படி பரிசோதனைக்குப் போன இடத்தில் யாரோ அவரைப் பார்த்துவிட்டு அவருக்கு நெஞ்சுவலி என்று வெளியே சொல்லிவிட்டார்கள் என்று மணிரத்னம் அலுவலகத்தில் சொல்கிறார்கள்.

ஆக, மணிரத்னம் நலமாக இருக்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close