Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கையெழுத்துப் போட மறுத்தாரா கமல்?

உத்தமவில்லன் படம் வெளியாகிற அன்று ஏற்பட்ட சிக்கலின்போது லிங்குசாமிக்கு, ஞானவேல்ராஜா பெரியஉதவி செய்தார். அவர் மட்டுமின்றி மதுரைஅன்பு உட்பட இன்னும் சிலரும் லிங்குசாமக்குப் பெரியஅளவில் உதவியிருக்கிறார்கள, அந்த உதவிகளெல்லாம் போதாத நிலை இருந்ததாம்.

அந்த  நேரத்தில் லிங்குசாமிக்கு உதவும் விதமாக மறுபடி கமலே ஒரு படம் செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்களாம். கமலும் அதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. அதேசமயம் அடுத்தபடம் செய்வதை ஒப்பந்தமாக எழுதிக்கொடுங்கள், அதைக் கடன்காரர்களிடம் காட்டி கடனுக்ககாக அந்தப்படத்தைக் கொடுப்பதாகச் சொல்லிச் சமாளிக்கலாம் என்று லிங்குசாமி தரப்பு கேட்டதாம். கேட்டதோடு நில்லாமல் ஒரு ஒப்பந்தத்தையும் தயாரித்து கமலுக்கு அனுப்பிவைத்தார்களாம்.

ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கமல் கையெழுத்திட மறுத்து திருப்பி அனுப்பிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. நிச்சயம் திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்கிறேன், அதேசமயம், அது என்ன படம்? கதை என்ன? இயக்குநர் யார்? என்பதெல்லாம் முடிவு செய்யாமல் ஒப்பந்தம் போடுவது நன்றாக இருக்காது என்று சொல்லி கமல் மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இதனால் திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்துக்கு மறுபடி ஒரு படம் செய்வது என்பது வாய்ச் சொல்லாகத்தான் இருக்கிறதென்று திரையுலகில் சொல்லப்படுகிறது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close