Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்னும் பதினைந்து நாட்களுக்கு அஜித்தோடுதான்- லட்சுமிமேனன் உற்சாகம்.

அஜித் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் அஜீத்தோடு நடிக்கவிருப்பது அவருக்குத் தங்கையாக நடிக்கும் லட்சுமிமேனன் மட்டும்தான்.

நாளைக்கு வந்து சேர்ந்துகொள்கிறாராம் நாயகியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன். இந்தப்படப்பிடிப்பு பதினைந்து நாட்களுக்கு நடக்கும் என்று சொல்கிறார்கள்.  இந்தப் பதினைந்து நாட்களும் அஜித்தோடு இருக்கப்போகிறேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் லட்சுமிமேனன்.

படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிக வலுவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. என்ன காட்சிகள் எடுக்கப்போகிறார்கள்? என்பது பற்றி  லட்சுமிமேனனுக்கு எதுவும் தெரியவில்லை.

முதல் பதினைந்து நாட்களில் ஒரு நிச்சயதார்த்தக் காட்சியை எடுக்கவிருக்கிறார்களாம். அதற்குள் ஒரு பாடலையும் எடுக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close