Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கை மாறியதா விக்ரம் படம்?

அரிமாநம்பி படத்தை இயக்கிய ஆனந்தசங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதியபடத்தை தாணு தயாரிப்பதாக இருந்தது. அந்தப்படம் தாணுவிடம் வந்ததே பெரியகதை என்று சொல்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக விக்ரம் நடிப்பில் கரிகாலன் என்று ஒரு படம் தொடங்கப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்ததோடு அந்தப்படம் நின்றுவிட்டது. அந்தப்படத்தின் தயாரிப்பு பொறுப்பில் இருந்தவர் தாணுவின் தம்பிதானாம்.

அந்தப்படத்துக்காக விக்ரம் கொடுத்த தேதிகளை வீணடித்துவிட்டார்கள். ஆனாலும் மறுபடி விக்ரமிடம் போய்த் தேதிகள் வாங்கிவிட்டார்களாம். அவரும் இயக்குநர் ஆனந்த்சங்கர் சொன்ன கதை பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம். ஆனால் சொன்னபடி படத்தை அவர்கள் தொடங்காததால் ஐங்கரன் நிறுவனம் அந்தப்படத்ததைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாம். அதன்பின்னர் மறுபடி படத்தை நாங்களே தயாரிக்கிறோம் என்று தாணுவின் தம்பி கேட்டதாகத் தெரிகிறது.

ஆனால் அப்படியெல்லாம் நினைத்தபடி மாற்றமுடியாது என்று விக்ரம் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. தாணுவும் விசயத்தைப் பெரிதாக்காமல் விட்டுவிட்டார் என்று சொல்கிறார்கள். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்கவிருக்கிறார் என்றும், ஜூன் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் சொல்கிறார்கள். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்