Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துவங்கியது தல 56... அஜித்துடன் காமெடி சரவெடி கொளுத்தப்போகிறார் சூரி!

அஜித் நடிப்பில் முன்பு 'வீரம்' கொடுத்த சிவா, மீண்டும் அஜித்தை வைத்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

'வீரம்' படத்தில் 'முரட்டுக்காளை' பட ரேஞ்சுக்கு அண்ணன் தம்பிகள் பாசத்தை அநியாயத்துக்கு திரையில் காட்டினார் சிவா. இப்போது 'பாசமலர்' பாணியில் அண்ணன், தங்கை பாசத்தை கண்கலங்க காட்டப் போகிறார். அஜித்துக்கு தங்கையாக நடிக்க பல முன்னணி நடிகைகளை அணுகினர். எல்லோரும் அஜித்துக்கு ஜோடியா? என்று ஆவலோடு கேட்க 'தங்கை வேடம்' என்றதும் தலைதெறிக்க ஓடினார்கள்.

'சம்பளம் ஜாஸ்தி' என்று ஆசைக்காட்டியும் கூட அனைவரும் அம்பேல். கடைசியில் லட்சுமி மேனன் அஜித்துக்கு தங்கச்சியாக நடிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஏற்கனவே பின்னிமில்லில் படமாக்கப்பட்ட 'மங்காத்தா' சென்டிமென்ட் சக்ஸஸ் ஆனதால், இன்று அதே இடத்தில் தேங்காய் உடைத்து ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகியுள்ளது. இன்று தொடங்கி 15 நாட்கள் தொடர்ந்து பின்னிமில்லில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்காகவே லம்பாக 15 நாட்கள் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து இருக்கிறார், லட்சுமி மேனன். அஜித், லட்சுமிமேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறார் சிவா. உண்மையில் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு கொல்கத்தா பின்புலத்தில் நடக்கிறது.

'சிறுத்தை', 'வீரம்' படத்தில் சந்தானம் நடித்தபோது சிவாவுக்கும், அவருக்கும் கெமிஸ்ட்ரி தாறுமாறாக ஒர்க் அவுட் ஆனது. அதுபோல இப்போதும் அணுக, கறாராக 'இனிமே ஒன்லி ஹீரோவாகத்தான் நடிப்பேன்' என்று 'நோ' சொல்லி விட்டாராம் சந்தானம். ஆதலால் இப்போது சூரி காட்டில் கோடை மழை கொட்டுகிறது.

அஜித்துடன் காமெடி வாலா கொளுத்தியபடி படம் முழுக்க பவனி வருகிறார் சூரி. ஏ.எம். ரத்னத்தை தொடர்ச்சியாக இரண்டு படங்களுக்கு தயாரிப்பாளராக்கி இருக்கிறார் அஜித்குமார்.

- எம் குணா -

MUST READ

எடிட்டர் சாய்ஸ்