Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா... விரைவில் அரண்மனை பார்ட் 2

சுந்தர் சி இயக்கத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ’அரண்மனை’. காமெடி கலந்த திகில் படமாக வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. 

தற்போது இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செல்வில், த்ரிஷா, சித்தார்த் , ஹன்சிகா என முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க சுந்தர் சி இயக்க உள்ளார். இதுகுறித்து ஹன்சிகா ட்விட்டரில் 'நான்காவது முறையாக என் மனம் கவர்ந்த இயக்குநர் சுந்தர் சியுடன் இணைய உள்ளேன். மீண்டும் அரண்மனை, மிகப்பெரிய ஸ்டார் டீம்' என ட்வீட் செய்துள்ளார். இவருக்கு பதில் ட்வீட்டாக குஷ்பு 'நீ இல்லாமல் முழுமை அடையாது டியர், வீட்டிற்கு மீண்டும் வருக என ரீட்வீட் செய்துள்ளார்'. 

இவர்கள் தவிர்த்து மற்றுமொரு முன்னணி நடிகை இந்த கூட்டணியில் இணைய உள்ளாராம். காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, என இவர்கள் கூட்டணியே மிகப்பெரிய கூட்டணி என்ற நிலையில் படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்