Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்வராகவன்- சிம்பு படத்திலிருந்து விலகினார் த்ரிஷா.

இந்தவாரம் முழுக்கச் செய்திகளில் இருப்பது என்று த்ரிஷா முடிவுசெய்துவிட்டார் போலும். அடுத்தடுத்து செய்திகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார். இப்போதுதான் திருமணம் நின்றது பற்றிய சர்ச்ரசைகள் கொஞ்சம் அமுங்கியது. இதோ அடுத்தது தொடங்கிவிட்டது.

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப்படத்தின் போட்டோ ஷூட்டிலும் கலந்துகொண்டார். அதைப்பற்றிப் பெருமையாகவும் பேசினார். அதன்பின் அதிரடி மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அந்தப்படத்தின் படப்பிடிப்பு மே 11 இல் இருந்து தொடங்குவதாகச் சொல்கிறார்கள். முதல் நாளிலிருந்தே த்ரிஷா நடிப்பது போல் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டிருந்தார்களாம்.

படப்பிடிப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கிற நேரத்தில் படக்குழுவினரைத் தொடர்பு கொண்ட த்ரிஷா, அரண்மனை2 மற்றும் கமல் படங்களில் நடிக்கவிருப்பதால் இந்தப்படத்தில் நடிக்கத் தேதிகள் இல்லை என்று சொல்லி அதிர்ச்சியளித்திருக்கிறார். படப்பிடிப்புத் தொடங்குகிற நேரத்தில் த்ரிஷா இப்படிச் சொன்னதைக் கேட்டதும் செல்வராகவன் கடுங்கோபமடைந்துவிட்டாராம். இந்தப்படத்தில் நான் நடிக்கிறேன் என்று கேட்டதே த்ரிஷாதான். அதனால்தான் நடிக்கவைத்தோம்.

படப்பிடிப்புத் தொடங்குகிற நேரத்தில் இப்படிக் காலை வாரிவிட்டுவிட்டாரே என்று கோபமாம். படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி தொடங்கியாக வேண்டும் என்பதால் எதாவது ஒரு புதுமுகநாயகியை நடிக்கவைக்கலாம் என்று முடிவுசெய்துவிட்டாராம் செல்வராகவன். இதனால் அவருடைய குழுவினர் நாலாபுறங்களிலும் நாயகியைத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்