Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’தல 56’ படத்தை தொடர்ந்து ’சிங்கம் 3’ ... சூரி காட்டில் மழை!

 சந்தானம் ஹீரோவாக நடிக்க களம் இறங்கினாலும் இறங்கினார், சூரி காட்டில் அடை மழை பொழியத் துவங்கியுள்ளது. தொடர்ச்சியாக சந்தானம் நடிக்க வேண்டிய பல படங்களில் சூரி நடிக்கத் துவங்கியுள்ளார். சமீபத்தில் மிகப்பெரும் கூட்டணியான சிவா , சந்தானம் கூட்டணியே மாற்றமாகி, அஜித்தின் அடுத்த படம் சூரி கைக்கு சென்றுள்ளது. 

அதே பாணியில் அடுத்ததாக இயக்குநர் ஹரியும் தனது ‘சிங்கம் 3’ படத்தில் சூரியை ஒப்பந்தம் செய்துள்ளார். ஏற்கனவே ஹரியின் ‘பூஜை’ படத்தில் சூரி நடித்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து தற்போது ‘சிங்கம் 3’ படத்திலும் சூரி காமெடி சரவெடிதான் இடம்பெற இருக்கிறது. 

வடிவேலு, சந்தானம் என இருவரும் ஹீரோ வேடம் கட்ட களம் இறங்க சூரி ‘இது நம்ம ஆளு’, ‘மாப்பிள்ளை சிங்கம் ’, ’சிங்கம்’, ’அப்பா டக்கரு’, ’ரஜினி முருகன்’, ’தல 56’ உள்ளிட்ட பல பெரிய படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். தற்போது மட்டும் சூரிக்கு சுமார் 10க்கும் மேற்பட்ட படங்கள் கையில் உள்ளன. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்