Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாஸ் இன்னும் ஒரு வாரம் தள்ளிப் போனது எதனால்?

 வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் மாஸ் படம், மே 15 இல் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.அந்தத் தேதியில் ஜோதிகாவின் 36 வயதினிலே யை வெளியிடலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள்.அதனால் மாஸ் படத்தை ஒரு வாரம் தள்ளி மே 22 இல் வெளியிடவிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இப்போது இன்னும் ஒருவாரம் தள்ளி மே 29 இல் படத்தை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஏன் இன்னும் ஒரு வாரம் தள்ளிப்போகிறது? 36 வயதினிலே படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது, அந்தப்படத்தை நீங்களே (இவ்விரண்டு படங்களையும் ஸ்டுடியோகிரின் நிறுவனம்தான் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.) ஏன் ஒரு வாரப்படம் என்பது போல் காட்டுகிறீர்கள் என்று பலரும் சுட்டிக்காட்டினார்களாம்.

அந்தப்படம் வெளியாகி அடுத்த வாரமே மாஸ் வந்துவிட்டால் அதைப்பார்க்கத்தான் ஆர்வம் காட்டுவார்கள் என்பது எதார்த்தம். அதோடு தற்போது நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 15 ஆம் தேதி முதல் இறுதிக்கட்டத்தில் இருக்கிறதாம். அதனால் இளைஞர்கள் அதைப்பார்க்கவே ஆர்வம் காட்டுவார்கள். மே24 அன்று இறுதிப்போட்டி முடிவடைந்துவிடும், அதன்பிறகு படத்தை  வெளியிடலாம் என்று திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சூர்யா படம் என்பதால் ஒப்பனிங் நன்றாகவே இருக்கும் என்றாலும் கிரிக்கெட் ஆர்வம் காரணமாக கொஞ்சம் பேர் வராமல் இருக்கும் வாய்ப்புஇருக்கிறது. அதையும் இழந்துவிடக்கூடாது என்று நினைத்துத்தான் ஒரு வாரம் தள்ளிப்போட்டிருப்பார்கள் என்று சொல்கிறார்கள். 

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close