Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அவதார் 2, 3 சாத்தியமா?... சிந்திக்கும் ஜேம்ஸ் கேமரூன்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில்  சாம் வொர்திங்டன், ஸோ சல்டானா, உள்ளிட்ட பலர் நடிப்பில் பல மில்லியன்கள் பொருட்செலவில் உருவான படம் ’அவதார்’. 2009ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான அளவிற்கு வசூலையும் குவித்ததோடு, உலகப் புகழ் படமாகவும் மாறியது. 

இந்நிலையில் இப்படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக உள்ளன. இந்த படத்தின் கதைப்படி ஜேம்ஸ் கேமரூன் 5 பாகங்கள் வரை கதை எழுதியுள்ளாராம். எனினும் ஒரு வெற்றிபெற்ற படத்திற்கு பாகங்கள் அமைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் ஜேம்ஸ் கேமரூன் தெளிவாக இருக்கிறார்.

அதிலும் முதல் பாகத்தின் உருவாக்கமும், செலவும் கணக்கிடுகையில் அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பதில் சிக்கல் இல்லை என்றாலும், படத்தின் பாக்ஸ் ஆபீஸ் என்ற நிலையில் கண்டிப்பாக பிரச்னை வருவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளன என்பதால் கடும் முயற்சி வேண்டாம் என திட்டமிட்டுள்ளார். 

5 பாகங்களை சுருக்கி மூன்று பாகங்கள் என மாற்றியமைத்துள்ளாராம். மேலும் அடுத்தடுத்த பாகங்கள் இந்த கால இடைவெளியில் முடிக்கப்பட்டு , அறிவிக்கப்படும் தேதியில் சரியாக வெளியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். 

2ம் பாகம் 2017ம் ஆண்டும், 3ம் பாகம் 2018ம் ஆண்டும் வெளியிட வேண்டும் என்ற திட்டத்தில் இப்போது ஸ்க்ரிப்ட் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹோர்னர் தனது இசைப் பணியையும்  துவக்கிவிட்டாராம். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close