Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செல்வராகவன் படத்திலிருந்து த்ரிஷா வெளியேற வருண்மணியன் காரணமா?

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதியபடத்தில் நாயகியாக நடிக்கவிருந்த த்ரிஷா கடைசிநேரத்தில் வெளியேறிவிட்டார் என்று சொல்லப்பட்டது. கமல் மற்றும் சுந்தர்சி படங்களில் நடிக்கவேண்டியிருப்பதால் இந்தப்படத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார் என்றும் சொன்னார்கள்.

ஆனால் அவராக வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்றும் ஒரு தகவல் உலவிக்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்குகிற நேரத்தில் அவர்களாகவே வெளியேறியது எதனால் என்பதற்கும் காரணம் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தை சித்தார்த் என்பவர் தயாரிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் வருண்மணியனுடன் இருந்தவராம். இந்தப்படத்தில் த்ரிஷா இருப்பதை வருண் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

அவர் விருப்பத்துக்கு மாறாக நடக்க தயாரிப்பாளர் விரும்பவில்லை. அதனால் தயாரிப்புத் தரப்பிலிருந்து த்ரிஷாவை நீக்கிவிடலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தார்களாம். அதோடு த்ரிஷாவுக்குப் பதிலாக நடிக்க வேறு நாயகியைத் தேடிக்கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தவிசயம் த்ரிஷாவுக்குத் தெரிந்துவிட்டதாகவும் அதனால் அவரே முந்திக்கொண்டு இந்தப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டதாகவும் பேச்சு இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் இதுபற்றி எந்த விளக்கமும் அளிக்காத வரை இதுபோன்ற செய்திகள் உலவிக்கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியாது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close