Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ - தெலுங்கில் யார் ஹீரோ , ஹீரோயின்?

 கௌதம் மேனன் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும்  ’அச்சம் என்பது மடமையடா’ படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படம் ‘என்னை அறிந்தால்’ படத்திற்காக பாதியில் நிறுத்தப்பட்டு பிறகு அப்படத்தின் முடிவிற்கு பிறகு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முதலில் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமான பல்லவி சுபாஷ் மாற்றப்பட்டு சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு மலையாள நடிகையும் படத்தில் நடிக்க இருக்கிறாராம். சிம்புவின் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை இயக்கியபோது அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நாகசைதன்யா மற்றும் சமந்தா நடிக்க ஒரே நேரத்தில் இரு படங்களையும் இயக்கினார் கௌதம் மேனன். 

இரு படங்களும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது உருவாக உள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் தெலுங்கு பதிப்பும் ஒரே நேரத்தில் துவங்கப்பட உள்ளது. இதிலும் நாகசைதன்யா மற்றும் சமந்தா நடிக்க உள்ளனர். சிம்பு படம்  30% முடிவிற்கு பிறகு தெலுங்கு படம் துவங்க உள்ளதாம். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close