Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்யின் உலக லோக்கல் தர டிக்கெட்டு பாடல்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘புலி’ இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் நிறைவை நெருங்கிவிட்டது. ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி , சுதீப், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் முடிவிற்கு பிறகு அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, மற்றும் எமி ஜாக்சன் என இரு நாயகிகள் நடிக்க உள்ளனர். சமந்தா கேரக்டரில் நடிக்க முதலில் பேசப்பட்டவர் நயன்தாரா சில பல காரணங்களால் சமந்தா வசம் அந்த வாய்ப்பு சென்றது. 

படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். ஜி.விக்கு இது 50வது படம். விஜய்க்கு இது 59வது படம். இந்நிலையில் ’படத்தின் பாடல்களின் டைட்டில்கள் அனைத்தும் ட்ரெண்ட் செட்டாக இருக்கும். விஜய், அட்லீ, ஜி,வி. காம்பினேஷன் இன்னும் சில மாதங்களில் வெளியாகும், அதுவரை காத்திருங்கள்’. 

’மேலும் விஜய்யை கிழி டான்ஸ் லுக்கில் பார்க்க நினைப்பவர்களுக்காக, ஒரு உலக லோக்கல் தர டிக்கெட் பாடல் காத்திருக்குதுடி செல்லக்குட்டீஸ்'. என ட்விட்டரில் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்’. இப்படம் ஒரு குடும்ப படமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் தேசிய விருது பெற்ற உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ஒரு பாடல் வேறு இருப்பதால் குழந்தை பாடுவது போன்ற ஒரு பாடலும் படத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close