Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அலைக்கழிக்கும் அஞ்சலி, தவிக்கும் தயாரிப்பாளர்கள்!

சித்தியுடனான சண்டைக்குப் பிறகு தமிழில் நடிக்காமல் இருந்த அஞ்சலியைத் திரும்ப நடிக்கவைக்கப் பலரும் யோசித்த நேரத்தில் வாய்ப்புக் கொடுத்தவர்கள், சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் அப்பாடக்கர் படக்குழுவும் விமல் நாயகனாக நடிக்கும்  மாப்பிள்ளைசிங்கம் படக்குழுவினரும்தான். இப்போது அவர்கள் இருவருமே ஏன் இவரை நடிக்கவைத்தோம் என்று வருத்தப்படும்படி நடந்துகொண்டிருக்கிறாராம் அஞ்சலி.

அப்பாடக்கர், மாப்பிள்ளை சிங்கம் ஆகிய இருபடங்களின் வசனக் காட்சிகளும் முடிவடைந்துவிட்டனவாம். இரண்டு படங்களிலும் தலா ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம். அந்தப்படங்களில் பாடல்களின் படப்பிடிப்புத் தொடங்குவதற்கு முன்பாக அமெரிக்கா போய்விட்டாராம் அஞ்சலி. அங்கிருந்து வந்ததும் பாடலை எடுத்துவிடலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றாராம். இதனால் ஏப்ரல் முதல்வாரத்தில் பாடலை எடுத்துவிடலாம் என்று மாப்பிள்ளைசிங்கம் படக்குழுவினர் தயாராக இருந்தார்களாம்.

முதல்வாரத்தில் முடியாது ஏப்ரல் 20 க்கு மேல் வந்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தாராம். அதை நம்பி இவர்களும் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அப்போதும் அவர் வரவில்லை. வராதது மட்டுமின்றி போன் தொடர்பிலும் இல்லாமல் போய்விட்டாராம். பல நேரங்களில் போன் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறதாம், சில நேரங்களில் போன் அடித்தாலும் எடுப்பதில்லை என்று போய்க் கொண்டிருக்கிறதாம்.

ஏப்ரலிலேயே முடியவேண்டிய படப்பிடிப்பு மே மாதம் தொடங்கியும் தொடங்காமலே இருக்கிறதாம். இதனால், எப்போது பாடலைப் படம்பிடிப்பது என்று தெரியாமல் இரண்டுபடக்குழுவினரும் தவித்துக்கொண்டிருக்கிறார்களாம்.
 

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close