Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்ஆண்டனியின் படம் ஈரானியப்படத்தின் தழுவல்!

விஜய்ஆண்டனி கதாநாயகனாக நடித்த படங்கள் ஏதாவதொரு பிறமொழிப்படத்தின் தழுவலாகவே இருக்கிறது என்று சொல்வார்கள். நான் மற்றும் சலீம் ஆகிய படங்கள் பற்றியும் அவ்வாறே சொல்லப்பட்டது. அவர் கதாநாயகனாக நடித்த மூன்றாவதுபடம் இந்தியாபாகிஸ்தான். கடந்த வெள்ளிக்கிழமை மே 9க்கு திரைக்கு வந்த அந்தப்படமும் ஒரு இரானியப்படத்தின் அப்பட்டமான தழுவல் என்று சொல்லப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு வெளியான ஆதாம்ஸ் சன் ஈவ்ஸ் டாட்டர் என்கிற படத்தைத்தான் எடுத்திருக்கிறார்களாம். அந்தப்படத்தின் கதையும் இரண்டு வழக்குரைஞர்களுக்கான போராட்டமே என்கிறார்கள். கதை மட்டுமின்றி பெரும்பாலான காட்சிகளும் அப்படியே எடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. சிற்சில மாற்றங்களுடன் அப்படியே அந்தப்படத்தை அடித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சர்வதேசத்திரைப்படவிழாவில் இந்தப்படம் திரையிடப்பட்டதென்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு இதுபோல நாம் ஒரு திரைக்கதை உருவாக்கலாமே என்று நினைத்தவர்களும் இதையே எடுக்கலாமே என்று நினைத்திருந்தவர்களும் இந்தியாபாகிஸ்தான் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்களாம்.  
 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close