Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6 லட்சம் நிதியுதவி... சபாஷ் ஹன்சிகா?

’மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜய், தனுஷ், சிம்பு, சூர்யா, ஆர்யா, கார்த்தி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். 

ஹன்சிகாவின் இன்னொரு முகம் அவரது உதவும் பாங்குதான். ஏற்கனவே தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு ஆதரவற்ற குழந்தை என்ற ரீதியில் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் தீபாவளி, உள்ளிட்ட பல பண்டிகைகளை அவர் அந்த குழந்தைகளுடன் தான் கொண்டாடுவார்.

தற்போது அடுத்த கட்டமாக நிலநடுக்கத்தால் தவித்துவரும் நேபாளம் நாட்டிற்காக 6 லட்சம் ரூபாயை நிதியாக கொடுத்துள்ளார். ஹன்சிகாவின் இந்த செயலால் பல நடிகர்கள் முதல் ரசிகர்களும் உதவிக்கரம் நீட்ட முன்வருவர் என சினிமா பிரபலங்கள் பலரும் ஹன்சிகாவை பாராட்டத் துவங்கியுள்ளனர். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்