Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படாஸ் ரீமேக்... ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்த ப்ளான்!

’காஞ்சனா 2’ படம் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்புகளை பெற்று பாக்ஸ் ஆபீஸ் லிஸ்ட்டிலும் வசூலை குவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குநர் பணிக்கு சில காலம் இடைவெளி கொடுத்துவிட்டு தெலுங்கில் வெளியான படாஸ் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். 

இதற்கான இயக்குநர் யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை, படத்தைப் தயாரிக்க உள்ளார் ‘ஆர்.பி.சௌத்ரி. படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தையடுத்து ராகவா லாரன்ஸ் மேலும் சில ஸ்க்ரிப்டுகளை முன்னணி ஹீரோக்கள் நடிப்பில் உருவாக்க திட்டமிட்டுள்ளேன். 

அதில் இரண்டு ஸ்க்ரிப்டுகள் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், பவன் கல்யாணுக்காக ஒரு கதையையும் உருவாக்கி வருகிறேன். இந்த படம் முடிந்த பிறகு அவரிடம் கதை கூறுவேன் எனக் கூறியுள்ளார். ’படாஸ்’ படம் காமெடியான பொழுதுபோக்கு படம். 

ஒரு கெட்ட போலீஸ் தனக்கு நடக்கும் வித்யாசமான அனுபவத்தால் திருந்தி எப்படி வாழ்கிறார் என்பதே படத்தின் கதையாம். இந்த படத்தில் தான் லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். மேலும் ’காஞ்சனா’  படத்தின் அடுத்த பார்ட்டுக்கும் தான்  ரெடி எனவும் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close