Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொடுத்த வாக்கை மீறுகிறாரா அஜித்?

அஜித் இப்போது சிறுத்தைசிவா இயக்கத்தில் புதியபடமொன்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்துக்காக இதுவரை இல்லாத வகையில் பெரும்தொகை ஒன்றைச் சம்பளமாகப் பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு சம்பளம் தந்தால் சிக்கலாகிவிடுமோ என்று தயாரிப்பாளர் தயங்கியபோது, அடுத்தபடத்தையும் உங்கள் நிறுவனத்துக்கே செய்கிறேன் என்று வாய்மொழியாக உத்திரவாதம் கொடுத்திருந்தாராம் அஜித். அதனால் தயாரிப்பாளரும் தெம்பாக இருந்திருக்கிறார்.

திரையுலகைப் பொறுத்தவரை ஒரு நடிகர் படத்தால் நட்டமேற்பட்டால் அதே நடிகரை வைத்து அல்லது அவருக்கு இணையான சந்தை மதிப்பு உள்ள நடிகரை வைத்துப் படமெடுத்தால்தான் வெற்றி பெறமுடியும். இதை நன்கு உணர்ந்திருக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், அஜித்தின், அடுத்தபடமும் உங்களுக்கே என்கிற வாக்குறுதி காரணமாகச் சந்தோசமாக இருந்தாராம்.

இப்போது கசியும் செய்திகளைப் பார்த்தால் அவருக்கு அந்தச் சந்தோசம் நீடிக்காது போலத் தோன்றுகிறது. இப்போது கசியும் செய்தி என்ன? இயக்குநர் விஷ்ணுவர்தனைக் கூப்பிட்டு அடுத்து நாம் சேர்ந்து படம் செய்யலாம் ஒரு கதை தயார் செய்யுங்கள் எள்று சொல்லியிருக்கிறாராம் அஜித். இதுதான் ஏ.எம்.ரத்னத்தின் சந்தோசத்தைக் கெடுக்கும் செய்தி என்று சொல்கிறார்கள்.

விஷ்ணுவர்தன் படத்தையே ரத்னம் தயாரிக்கலாமே என்று கேள்வி வரலாம். ஏற்கெனவே அஜித் நடித்த ’ஆரம்பம்’ படத்தை இயக்கிய நேரத்தில் ரத்னத்துக்கும் விஷ்ணுவர்தனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம். அதனால் அந்த நிறுவனத்துக்கு விஷ்ணுவர்தன் படம் இயக்கமாட்டார் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தை நிச்சயம் வேறு தயாரிப்பாளர்தான் தயாரிப்பார், இது இப்படித்தான் என்றால் அஜித்தின் வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

ஒருவேளை ரத்னம் விஷ்ணுவர்தன் ஆகிய இருவரையும் அவர் சமாதானம் செய்து வைப்பாரோ என்னவோ? இதுபற்றி அவர்களாகச் சொல்லாதவரை செய்திகள் ரெக்கை கட்டிப் பறக்கத்தான் செய்யும்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்