Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

த்ரிஷாவின் இடத்தைப் பிடித்தார் கேத்தரின்தெரசா.

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பதாக இருந்தது. படப்பிடிப்புத் தொடங்குகிற நேரத்தில் படத்திலிருந்து விலகிக்கொள்வதாகச் சொல்லிவிட்டார் த்ரிஷா.

எனவே புதுமுகமாக இருந்தாலும் சரி ஏதாவது ஒரு நடிகையைப் பிடித்து திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடங்கிவிடவேண்டும் என்று செல்வராகவன் கறாராகச் சொல்லிவிட்டாராம். இதற்கிடையே புதியநாயகி என்பதில் சிம்புவுக்கு விருப்பமில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மக்களுக்குத் தெரிந்த நாயகியரில் யாருடைய தேதிகள் இருக்கின்றன என்று தேடினார்களாம்.

மெட்ராஸ் படத்தில் நடித்த கேத்தரின் தெரசாவின் தேதிகள் இருந்தனவாம். கதைக்கும் அவர் பொருத்தமாக இருப்பார் என்று செல்வராகவன் சொல்லியிருக்கிறார். சிம்புவுக்கும் அவர் என்றால் ஓகே. எனவே, சிக்கல் தீர்ந்தது என்று அவரையே நாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். மே 13 இலிருந்து அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். சிலநாட்கள் கழித்து கேத்தரின்தெரசா படப்பிடிப்புக்கு வருவார் என்று சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close