Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய்சேதுபதிக்கு வில்லன் பார்த்திபன்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா  நடித்துவரும் படம் ‘நானும் ரவுடிதான்’ . படத்திற்கு இசை அனிருத். இந்த படத்தில் பார்த்திபன் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தவிர்த்து ஆர்.ஜே பாலாஜி, ராதிகா சரத்குமார், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தில் பார்த்திபன் கேரக்டர் குறித்து புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. பார்த்திபன் மிகவும் கூலான வில்லன் கேரக்டரில் வருகிறாராம். ’மாஸ் படத்திலும் இவர் ஒரு முக்கிய ரொலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் விரைவில் துவங்கப்பட உள்ள ‘சூதாடி’ படத்திலும் பார்த்திபன் நடிக்க இருக்கிறார். இவர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் அரசன்  கேரக்டர் எப்படிப் பேசப்பட்டதோ அதேபாணியில் இந்த படங்களின் கேரக்டர்களும் பேசப்படும் என்கின்றனர் படக்குழுவினர். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்