Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆண்ட்ரியா - ஃபகத் ஃபாசில்... என்னதான் பிரச்னை?

அடிக்கடி அசால்ட்டாக வதந்திகளில் சிக்கும் பிரபலங்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். அனிருத்- ஆண்ட்ரியா & கோ புகைப்படங்கள் இணையத்தில் எப்போது கொட்டியதோ அப்போதிருந்தே இது தொடர்கதை. சமீபத்தில் ’வலியவன்’ , ‘உத்தம வில்லன்’, என இருபடங்கள் இவரது நடிப்பில் வெளியானது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் உங்களுக்கு எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என கேட்க அதற்கு எனக்கு ரசூல் போல் கணவர் வேண்டும் என கூற பற்றிக் கொண்டது. ரசூல் 2013ம் ஆண்டு வெளியான ‘அன்னயும் ரசூலும்’ என்ற மலையாள படத்தில் நஸ்ரியாவின் கணவர் ஃபகத் ஃபாசில் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர்.

அந்த கதாபாத்திரம் போல் கணவர் வேண்டும் என ஆண்டிரியா கூற அவர் ஃபகத் போல் கணவர் கேட்கிறார் என இருவரையும் இணைத்து கிசு கிசுக்கள் பரவத் துவங்கியுள்ளது. உண்மையும் அதுவே அவர் அந்த கேரக்டரில் தான் கணவர் வேண்டும் என்றாரே தவிர்த்து நஸ்ரியாவின் கணவர் போல் கேட்கவில்லை. அது சரி ஊர் வாயை அடைக்கவா முடியும்? 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close