Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாய் ஃப்ரண்ட்ஸ் ஒரு மாயை... சொல்கிறார் கங்கனா ரணாவத்

 குயின் படத்திற்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற கங்கனா ரணாவத் , முதன்முதலில் சினிமாவில் நடிக்க வந்த வேளையில் அவரை அழகில்லை என நிராகரித்துள்ளனர். இப்போது தேசிய விருது பெறும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். 

சமீபத்தில் உங்களுக்கு 29 வயதாகிறது ஏன் இதுவரை உங்களுக்கு பாய் ஃப்ரண்ட் , அல்லது கிசு கிசுவோ என எதிலும் சிக்கியதில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பாய் ப்ரண்ட்ஸ் ஒரு மாயை. என பதில் அளித்துள்ளார். 

ஒரு நடிகையாக இத்தனை காலம் என்னை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், மக்களுக்கு தெரியும் சினிமாவில் நான் என்ன செய்ய வேண்டும் என்பது, இயக்குநர்களுக்கு தெரியும் நான் அவர்கள் படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்பது. மேலும் தேசிய விருது பெற்றாலும் எனக்கென எந்த தனிக் கொள்கைகளும் இல்லை. என்னை யாரும் கட்டுபடுத்தவும் ஆளில்லை. இரண்டாம் , மூன்றாம் தர படங்களில் கூட நடிக்க ரெடி.

சினிமா துறையை சேர்ந்தவரை பாய் ஃப்ரண்ட்ஸ் என சொல்லிக் கொண்டு சுற்றினால் அது தினமும் செய்திக்கு வேண்டுமானால் பயன்படலாம். வாழ்க்கைக்கும் , முன்னேற்றத்துக்கும் எந்த உதவியும் தராது. இது நம் மீதுள்ள மரியாதையை கெடுக்கும். மேலும் ஒருவரை நாம் எதிர்நோக்கி அவரது பாதுகாப்பில் இருப்பதில் நமக்கு மனசங்கடங்கள் தான் அதிகரிக்கும். நாளடைவில் இதை நீ செய்யாதே, அதை செய்யாதே என கட்டுப்பாடுகளும் உருவாகும். எனக்கென மிகச்சில நண்பர்கள் இருக்கிறார்கள். நான் இப்போதுவரை சந்தோஷமாக இருக்கிறேன் அது போதும் என கூறியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close