Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இணையத்தை கலக்கும் சமந்தா - தனுஷ் புகைப்படங்கள்!

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், நடிக்கும் புதிய படத்திற்கு இசை அனிருத். ‘அனேகன்’ படத்திற்கு பிறகு ‘மாரி’ படமும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படம் ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த படமான வேல்ராஜ் இயக்கும் படத்திற்கு தற்போதைக்கு விஐபி 2 என பெயரிடப்பட்டுள்ளது. 

இப்படத்தின் நாயகியான சமந்தா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை ரிலீஸ் செய்ய ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதுதவிர்த்து மற்றொரு புகைப்படமாக தனுஷ், ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிகுமாருடன் இருப்பது போல் ஒரு புகைப்படத்தையும் ஓரிரு நாட்களுக்கு முன் சமந்தா வெளியிட்டுள்ளார். 

இப்படம் துவங்கும் முன்பே தனுஷ், அனிருத் என இருவரும் காரில் சென்றபடி வீடியோ எடுத்து படம் குறித்து அறிவித்தனர். இப்போது இந்த புகைப்படங்கள் வித்யாசமான குடும்ப பின்னணியில் அமைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் ட்விட்டரில் சமந்தா 'சத்தியமாக சொல்கிறேன் , இது என்னுடைய சிறந்த வேலையாக இருக்கும்.கண்டிப்பாக தனுஷுக்கு என் நன்றிகள் என கூறியுள்ளார்’ ட்வீட் செய்துள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்