Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாஸ் மற்றும் ஓம்சாந்திஓம் ஆகிய இருபடங்களுக்கும் ஒரே கதையா?

தமிழ்த்திரையுலகில் அவ்வப்போது ஒரே கதையில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் தயாராகிவிடும். அவற்றில் ஏதாவதொரு படம் முதலில் வந்துவிட்டால் மற்ற படக்குழுவினர் அதிர்ச்சியடைவார்கள். இப்போதும் அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

சூர்யபிரபாகர் என்பவரது இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ஓம்சாந்திஓம். இது ஆவி சம்பந்தப்பட்ட திகில் நகைச்சுவை கலந்த கதை. இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளைக் கவரும்படி இருக்கும்.

படத்தைப் பார்த்த தணிக்கைத்துறையினர் பேய்ப்படத்தைக் குழந்தைகளும் ரசிப்பது போல எடுத்திருக்கிறீர்கள் என்று பாராட்டினார்கள், இப்படத்தில் ஆவி பற்றிய அச்சம், நகைச்சுவை ஆகியவற்றுடன் கல்வி வியாபாரம் ஆவது, கலப்பட மருந்துகள் பற்றிய விசயங்கள் ஆகிய சமுதாயக்கருத்துகளையும் சொல்லியிருப்பதாக ஓம்சாந்திஓம் படத்தயாரிப்பாளர் சொல்லியிருந்தார்.

நேற்று (மே 12) மாஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இது பேய்ப்படம்தான் ஆனால் அதிகமாகப் பயமுறுத்த மாட்டோம் குழந்தைகளுக்கும் பிடித்த மாதிரி எடுத்திருக்கிறோம் என்றெல்லாம் சொன்னார்கள்.

சூர்யா போன்ற ஒரு மாஸ்ஹீரோ படமென்பதால் அதற்குள் சமுதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளும் இடம்பெற்றிருக்கலாம். மாஸ் படத்தின் கதையும் ஓம்சாந்திஓம் படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கிறதென்று ஒருதகவல் ஏற்கெனவே உலவிக்கொண்டிருக்கிறது. தங்கள் படம் பற்றி இரண்டு படக்குழுவினரும் சொல்லியிருப்பதைப் பார்த்தால் அந்தத்தகவல் உண்மைதானோ என்று எண்ணத்தோன்றுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்