Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மேரே சப்னோ கி ராணி' பாடலுக்கு வடிவேலு , சதா நடனம்... எலி அப்டேட்!

சிட்டி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் யுவராஜ் இயக்கும் படம் ‘எலி’. வடிவேலு, சதா நடிப்பில் உருவாகி வரும் இப்படம் 60 -70 களில் நடக்கும் கதையாக உருவாகிவருகிறது. துப்பறியும் நிபுணராக வடிவேலு நடிக்கும் இப்படத்தில் சதா க்ளப் டான்சராக நடிக்கிறார்.

இப்படத்திற்காக 1969ம் ஆண்டு ராஜேஷ் கண்ணா , சர்மிளா தாகூர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ‘ஆராதனா’ படத்தின் பிரபலமான ‘மேரே சப்னோ கி ராணி’ பாடலை டூயட் பாடலாக முழுமையாக பயன்படுத்தியுள்ளனர். இதற்கான சரியான உரிமமும் பெற்றுள்ளனர் படக்குழுவினர்.

இந்த பாடலில் வடிவேலு, சதா நடனம் ஆடும் ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதுதவிர்த்து வடிவேலு, சதா நடனத்தில்  ‘கொள்ளை அழகு கொட்டி கிடக்கு’ எனத் துவங்கும் க்ளப் பாடலும் இப்படத்தில் உள்ளதாம். விரைவில் படத்தின் இசை வெளியாக உள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close