Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல் படத்தில் மூன்று நாயகிகள்?

 ’உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ என இருபடங்களும் முடிந்துவிட்டன. அதில் உத்தம வில்லன் ரிலீஸும் ஆகிவிட்டது. இந்நிலையில் அடுத்த படமாக ராஜேஷ் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கிறார். இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லாராக உருவாக இருக்கிறது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இந்த படத்திற்கு முதலில் ‘ஒரே இரவு’ எனப் பெயரிடப்பட்டதாக கூறப்பட்டது ஆனல் தற்போது ‘தூங்கா வனம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் படத்தில் கமலுடன் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மனிஷா கொய்ராலா மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் முக்கியமாக பாத்திரத்தில் வருகிறாராம். மேலும் த்ரிஷா இப்படத்தில் இரண்டாவது முறையாக கமலுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார் எனவும். அதே போல் ’காவியத்தலைவன்’ படத்தில் நடித்த அனைகா ஷோடியும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. 

இவர்கள் தவிர்த்து பிரகாஷ் ராஜ் ஒரு கேரக்டரிலும் நடிக்கிறார். வழக்கம் போல் கமலின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்திற்கு இசையமைக்கிறார். படம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இப்படத்தில் கமலுடன் மற்றொரு ஹீரோவும் நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close