Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

49ஓ படத்தயாரிப்பாளர் மீது கவுண்டமணி கோபம்.

 சில ஆண்டுகள் சினிமாவிலேயே நடிக்காமல் இருந்த கவுண்டமணி மறுபடியும் நடிக்கத் தொடங்கிய படம் வாய்மை. அந்தப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் உட்பட நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் கவுண்டமணியையே கதாநாயகனாக்கி முழுக்க முழுக்க அவரை நம்பியே தொடங்கப்பட்ட படம் 49ஓ.

கவுண்டமணியுடைய அரசியல் நையாண்டிகள் மிகவும் புகழ் பெற்றவை என்பதால் அரசியல் மற்றும் விவசாயம் சார்ந்த இந்தப்படத்தில் அவர்தான் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தார் அந்தப்படத்தின் இயக்குநர் ஆரோக்கியதாஸ். கவுண்டமணிக்கும் கதை மிகவும் பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டார்.

படப்பிடிப்பும் நடந்தது. திட்டமிட்டபடி நடக்காமல் கொஞ்சம் காலதாமதமாக படம் முடிவடைந்தது என்று சொல்கிறார்கள். படப்பிடிப்பு மற்றும் அதற்குப்பிறகான வேலைகளும் முடிவடைந்து படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். ஆனாலும் அந்தப்படத்தை வெளியிடாமல் அப்படியே வைத்திருக்கிறாராம் தயாரிப்பாளர். என்ன காரணம்? வானவராயன் வல்லவராயன் படத்தை வாங்கி வெளியிட்டாராம் இந்தப்படத் தயாரிப்பாளர்.

அதில் நட்டம் ஏற்பட்டு கொஞ்சம் கடனாகிவிட்டதென்றும் அதனால் அதைச் சரிசெய்துவிட்டு இந்தப்படத்தை வெளியிடுகிறேன் என்று சொன்னாராம். ஆனால் எப்போது படத்தை வெளியிடப்போகிறோம் என்பது பற்றி எதுவும் சொல்லாமல் இழுத்துக்கொண்டேயிருப்பதால் தயாரிப்பாளர் மீது கவுண்டமணி மிகவும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close