Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“அரசியல் கடையை மூடி வைத்திருக்கிறேன், வந்தாலும் வரலாம்!” வடிவேலு

எலியைப் பார்த்தாலே துரத்தி அடித்து அட்டகாசம் செய்யும் வடிவேலு இப்போ எலி படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தெனாலிராமன் படத்தைத் தொடர்ந்து யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாகிவரும் படமே எலி.

அரசியல் கடையை மூடிவைத்துவிட்டு இந்தக் கடையைத் திறந்திருக்கிறேன். அரசியலுக்கு வந்தாலும் வரலாம் வராமலும் போகலாம் என்று எலி படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் எலியாகவே மாறி குறும்புடன் பேச ஆரம்பித்தார் வடிவேலு.

ஏன் இவ்வளவு இடைவெளி என்று கேட்டதற்கு, “ என்ன எல்லோரும் திட்டுகிறார்கள். எது இவ்வளவு இடைவெளி என்று அதற்காகவே முழுசா படத்தில் இறங்கிவிட்டேன். தெனாலி ராமன் படத்துக்கும் இந்தப்படத்துக்கும் இடையே உள்ள கேப் அடுத்தப்படத்திற்கான பொதுவான இடைவெளிதானே. அதற்கு முன்பு விட்ட கேப் பற்றி தெனாலிராமன் படம் வெளியிடும் போதே சொல்லிவிட்டேனே. இனி இறங்கி நடிக்க வேண்டியதுதான்.

பெரிய நடிகர்கள் படத்தில் எல்லாம் காமெடி டிராக்கில் இனி நடிக்கமாட்டீர்களா என்று கேட்டதற்கு, “ அப்படியெல்லாம் இல்லை. இடைவெளி விட்டு நடிக்கிறோம். உடனே காமெடி டிராக் மட்டும் நடித்தால் நல்லா இருக்காது என்பதற்காகவே முழு படமும் காமெடி ஹீரோவாக நடித்திருக்கிறேன். இனி காமெடி டிராக் நடிக்க ரெடி. ரஜினியின் அடுத்தப் படத்தில் காமெடியனாக நடிக்க கூப்பிட்டாலும் நடிக்க தயார்.

“பழசுதாங்க எப்போதுமே பெஸ்ட். பழச மறக்க கூடாது. ஜெஸ்ட் 60களில் நடக்குற கதை தான் எலி. மேரே சப்னோ கி ராணி' என்ற ஹிந்தி பாடலுக்கும் வாயசைத்து டூயட் பாடியிருக்கிறேன். சரி எலி இந்தாயிருக்கு. அப்போ பூனையை எங்கனு தான கேக்குறீங்க, கஜினிபட வில்லன் பிரதாப் தான்.

சதாவுக்கும் எனக்கு டூயட்லாம் அதிகமா கிடையாது. நம்ம எப்போதுமே ஒன்சைடு காதல் தான். பாடல்ல கூட ரேடியோ பாடும். ரேடியோக்குள்ள போய் மலைல டூயட் பாடிட்டு மறுபடியும் ரேடியோ வழியா வெளிய வந்துருவோம். இவ்வளவுதாங்க டூயட்டுடுடு... லோக்கேஷனுக்காக வெளிநாட்டுக்கு கூட போகல. மூணாறுலயே முடிச்சாச்சு.

எலி புலியோட போட்டிப்போடுமா என்றதற்கு, “ எலி, புலி அடுத்து கரப்பான்பூச்சினு கூட படம் எடுக்கலாம். படத்தோட தலைப்புதாங்க இப்படி. யாரோடையும் போட்டிலாம் கிடையாது. நான் சிக்ஸ் பேக் ஹீரோ கிடையாது. ஒன்லி சிங்கிள் பேக் தான்.

மொத்தம் நான்கு பாட்டுல ஒரு பாடல் நானே பாடியிருக்கிறேன். அதுவும் ஜெயில்ல வச்சு பாடுகிற மாதிரி படமாக்கியிருக்கிறேன். அதுக்குனு மெசேஜ்லாம் சொல்ல வரவில்லை. முழுக்க முழுக்க காமெடிக்காக மட்டுமே இந்தப் படம். கடைசியா ஒரு மெசேஜ் மட்டும் சொல்லிருக்கேன். படம் வந்ததும் பாருங்கள் என்று ட்விஸ்ட் வைத்தார் வடிவேலு.

பஞ்ச் டைலாக்ஸ் இருக்குதுனு சொன்னீங்க. அது அரசியல் சார்ந்து இருக்குமா என்றதற்கு, “ விஷயம் இருக்கு. காமெடியா சொல்லிருப்பேன். படத்தில் பார்த்துவிட்டு ரசிகர்கள் சிரிப்பதற்கு எலி படம் ஃபுல் கேரண்டி என்று கூறினார் வடிவேலு.

நல்லவர்கள் கூட்டத்துல கெட்டவன் நுழைஞ்சா அவனை கருப்பு ஆடுனு சொல்லுவோம். கெட்டவர்கள் கூட்டத்தில் நல்லவன் போனா  அவன் தான் எலி. அந்த எலியோட அட்டகாசமே படத்தின் கதை என்றார் இயக்குநர் யுவராஜ். அதுமட்டுமில்லாமல் டாக்கிங் டாம் போலவே டாக்கிங் எலி என்று அப் ஒன்றையும் லாஞ்ச் செய்திருக்கிறார்கள் எலி டீம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close