Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பாராட்டிய படம்!

க்ரிஷ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கப்பர் ஈஸ் பேக்’ .மே மாதம் 1ம் தேதி ரிலீஸான இந்த படம் முதல் நாளில் மட்டும் 4 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தில் கரீனா கபூர் கான் ’தேரி மேரி கஹானி’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

’கப்பர் ஈஸ் பேக் படம்’ ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ’ரமணா’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை சமீபத்தில் டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பார்த்துள்ளார். 

படத்தை பார்த்த கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கப்பர் ஈஸ் பேக்’ படம் பார்த்தேன்.அற்புதமான படம். கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டும்’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கதைக்கருவே லஞ்சம், ஊழல் தான் என்பதால் கெஜ்ரிவாலும் அவரது கட்சியின் முக்கிய நோக்கமும் லஞ்சத்தை ஒழிப்பதே என்பதால் இப்படம் கெஜ்ரிவாலை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close