Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வனிதா தான் என்னை ஏமாற்றினார்.. விநியோகஸ்தர் புகார்

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதாகக் கூறி என்னை பணம் வாங்கிவிட்டு மோசடி செய்துள்ளதாக வைபிரண்ட் மூவி நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடேஷ் ராஜா மீது பரபரப்பு புகார் தெரிவித்தார் வனிதா.

இந்நிலையில் , வெங்கடேஷ் ராஜா வனிதா பெயரில் இன்று புகார் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கடந்த ஒரு வருடமாக வைப்ரண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை நான் நடத்தி வருகிறேன் கடந்த 13/4/15ம் தேதி வனிதா அவரது சொந்த தயாரிப்பு படமான ‘எம்.ஜி.ஆர்,சிவாஜி, ரஜினி, கமல்’ என்ற படத்தை ரிலீஸ் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். விசாரித்ததில் பலரும் இந்த படத்தை வாங்க மறுத்துள்ளது தெரியவந்தது.

 

இந்நிலையில் நான் படத்தை திரையிட்டுக் காட்டுமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கு படம் நன்றாக வந்துள்ளது , பட வெளியீட்டிற்கு தேவையான அனைத்து செலவையும் நான் தந்து விடுகிறேன் என அட்வான்சாக 10 லட்சத்து ஒரு ரூபாயை கொடுத்து படத்தை வெளியிடச் சொல்லி கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.ஆனால் படம் வெளியீட்டிற்கு முதல் நாள் வரை எனக்கு அவர் பணத்தை தரவில்லை.

கேட்டதற்கு ஓரிரு நாளில் தருவதாக கூறவே உடனே நானும் என் பணம் 16 லட்சத்தை செலவு செய்து படத்தை க்யூப்பில் வெளியிட்டேன். அதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. ஆனால் சொன்னபடி பணம் தராததால் வனிதாவிடம் கேட்டபோது , தரமுடியாது, உன்னால் என்ன செய்ய முடியுமோ செய், நான் நினைத்தால் உன்னை சினிமாவில் இருந்து காலி பண்ணிவிடுவேன் என தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார் என தற்போது விநியோகஸ்தர் வெங்கடேஷ் ராஜா வனிதா மீது புகார் கொடுத்துள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்