Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாயகியாக ஸ்ருதிஹாசன் , இசை அனிருத்...சிங்கம் 3 அப்டேட்?

சூர்யா தற்போது ‘மாஸ்’ ரிலீஸ், மற்றும் ‘24’,’ஹைக்கூ’ ஆகிய படங்களில் ஷூட்டிங் என படு பிசியாக நடித்துவருகிறார். இந்த படங்களின் நிறைவை அடுத்து சூர்யா ஹரியுடன் இணைந்து ‘சிங்கம் 3’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

முதல் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இயக்குநர் ஹரி மூன்றாம் பாகத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் ’சிங்கம் 3’ படத்தில் ஸ்ருதி ஹாஸன் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் இந்த படத்தில் வழக்கம் போல அனுஷ்காவும் நடிக்கிறாராம். ஆனால் ஸ்ருதி நடிப்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

எனினும் இரண்டாம் பாகத்தில் பள்ளி மாணவியாக முக்கிய வேடத்தில் ஹன்சிகா நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த செய்தியாக படத்திற்கு இசை அனிருத் என தகவல்கள் கசிந்துள்ளன.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்