Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்காட்சியில் மக்களோடு படம் பார்த்தார் ஜோதிகா.

 எட்டாண்டுகளுக்குப் பிறகு ஜோதிகா நடித்த 36வயதினிலே படம் நேற்று (மே 15) வெளியானது. பெரியஇடைவெளிக்குப் பிறகு நடித்திருப்பதால், தான் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு மக்கள் என்ன சொல்லப்போகிறார்களோ என்கிற பதட்டத்துடன் இருந்திருக்கிறார் ஜோதிகா. அதனால் நேற்று காலையில் முதல்காட்சியின் போதே, கணவர் சூர்யாவுடன் சென்று மக்களோடு படம் பார்த்திருக்கிறார் ஜோதிகா.

அவர் திரையரங்கில் இருந்தது ரசிகர்களுக்குத் தெரியாதாம். ஆனாலும் அவர் அறிமுகமாகிற காட்சி தொடங்கி அவர் வருகிற காட்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டாராம்.

உடன் இருந்த சூர்யா மற்றும் 36 வயதினிலே படக்குழுவினரிடம் மிகவும் குதுகலமாகப் பேசிக்கொண்டிருந்தாராம். படத்தில் ஜோதிகாவுக்கு இணையாக வசனங்களும் பாராட்டுப் பெறுகின்றன. அதனால் வசனம் எழுதிய விஜியையும் அழைத்துப் பாராட்டினார்களாம். அதேகாட்சியில் தன் மனைவியோடு படம் பார்க்க வந்திருந்தாராம் இயக்குநர் பாலா. அவரும் படத்தைப் பார்த்துவிட்டு ஜோதிகாவைப் பாராட்டிவிட்டுச் சென்றாராம்.

இதனால் மிக உற்சாகமாக இருக்கிறாராம் ஜோதிகா. வசூல்ரீதியாக வரவேற்புப் பெற்றதைவிட பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படத்தில் சிறப்பாக நடித்துவிட்டீர்கள் என்று எல்லோரும் பாராட்டுவதால் அதிக சந்தோசப்படுகிறார் என்று சொல்கிறார்கள். தன்னுடைய தயாரிப்பில் வெளியான முதல்படமே மிகவும் நன்றாக அமைந்துவிட்டதும், அதில் ஜோதிகாவுக்குக் கிடைக்கும் பாராட்டுகளையும் பார்த்து  சூர்யாவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close