Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயக்குநரின் காலில் விழுந்த நாயகி.

 புறம்போக்குஎன்கிறபொதுவுடைமை படத்தின் நாயகி கார்த்திகாவுக்குத் தமிழில் இது மூன்றாவதுபடம். அவர் தமிழில் நடித்த முதல்படம் 'கோ' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றபோதும் அந்த அளவுக்குப் படங்கள் தமிழில் அவருக்கு அமையவில்லை. இரண்டாவதாக பாராதிராஜாவின் 'அன்னக்கொடி' படத்தில் நடித்தார்.

அந்தப்படத்துக்குப் பின் அருண்விஜய்யின் 'வாடீல்' படத்திலும் புறம்போக்கு எனும் பொதுவுடைமை படத்திலும் நடித்தார். இவற்றில் புறம்போக்கு எனும் பொதுவுடைமை படம் நேற்று வெளியானது. அந்தப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் போராளி வேடத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. திரைப்படத்துறையினர் மட்டுமின்றி திரையரங்குகளிலும் அவருக்கு நல்லவரவேற்பு கிடைத்திருக்கிறதாம்.

இதனால் மிகவும் சந்தோசப்பட்ட கார்த்திகா, படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு ஓடிவந்து அவருடைய காலில் விழுந்து வணங்கினாராம். எல்லா இடத்திலிருந்தும் எனக்கு நல்ல பாராட்டு அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார்.

அதோடு கேரளாவில் அவர்களுக்குச் சொந்தமான நட்சத்திரவிடுதி இருப்பதாவும் அந்த விடுதிக்குப் படம் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து வந்து சிலநாட்கள் தங்கிவிட்டு வாருங்கள் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம். கார்த்திகாவின் செயலைப் பார்ர்த்து இயக்குநர் குழு நெகிழ்ந்துபோயிருக்கிறதாம்.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close