Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி தனுஷ் வரிசையில் சிவகார்த்திகேயன்.

ஸ்டேண்ட் அஃப் காமெடியனாக இருந்து டிவி தொகுப்பாளராக மாறி தற்பொழுது தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஹீரோவாக ஆறு படங்களே நடித்திருக்கிறார். ஆனாலும் இவரின் படத்திற்கு பாக்ஸ் ஆஃபிஸ் ஒபனிங், ரசிக பட்டாளம்  ஆகியன படு வேகத்தில் உயர்ந்து வருகிறது.

தற்பொழுது ட்விட்டரில் 1 மில்லியன் ரசிகர்கள் இவரைப் பின் தொடர்கின்றனர். ரஜினிகாந்தை.சித்தார்த் மற்றும் தனுஷைத் தொடர்ந்து  ஒரு மில்லியன் ரசிகர்களை ட்விட்டரில் பிடித்த அடுத்த நபர் சிவகார்த்திகேயன். குறைவான படம் என்றாலும் ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் விதம் மற்றும் ட்விட்டரில் படு ஆக்டிவ் இதுவே ட்விட்டரில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் பின்தொடர காரணம். 

அதுமட்டுமில்லாமல் ஒரு மில்லியன் நண்பர்களால் என்னை மில்லியனராக மாற்றிய உங்களுக்கு நன்றி என்று ட்விட்டரில் கருத்தும் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து ரஜினி முருகன் வெளியாகவிருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close