Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாரி டீஸர், மியூசிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாரி. படத்திற்கு இசை அனிருத். படித்து விட்டு வேலையில்லாமல் பெற்றோரிடம் திட்டு வாங்கும் கேரக்டரில் தனுஷ் அதிகம் நடித்திருக்கிறார்.

ஆனால் பாலாஜி மோகன் ’மாரி’ படத்தில் தனுஷை டெய்லராக வடிவமைத்துள்ளார். மேலும் காஜல் அகர்வால் நூல் விற்பவர் என்றும், அவரது கடைக்கு செல்லும் தனுஷுக்கு காஜல் மேல் காதல் வருகிறது, அதை சுற்றிய கதைக்களமே ‘மாரி’ என சொல்லப்படுகிறது.

படப்பிடிப்புகள் யாவும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.  இந்நிலையில் படத்தின் டீஸர் மே 20ம் தேதியான நாளை மறுநாள் வெளியாகும் எனவும் , இசை மே 25ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த சிறப்பு போஸ்டர் மட்டுமல்லாமல் படத்தின் பாடல்களில் சில வரிகளை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். 

"மட்டன் வெட்டுவியே உனக்கு இப்ப மல்லிகை ருசிக்கிறதா... மீச முறுக்குவியே கூந்தல் வாசம் மணக்கிறதா" 

"மாரி... கொஞ்சம் நல்ல மாறி...ரொம்ப வேற மாறி மாரி... தேச்சா தங்கம் மாறி...மொறச்சா சிங்கம் மாறி"...

இப்படி அமைந்துள்ளன அந்த வரிகள். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close