Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெய் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

ஜெய் இப்போது புகழ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மணிமாறன் என்பவர் இயக்கத்தில் அவர் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம். அந்தப்படத்திற்குப் பிறகு திரு இயக்கத்தில் ஒருபடம் நடித்துக்கொண்டிருக்கிறார் ஜெய்.

அந்தப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. டாப்ஸி, சோனியாஅகர்வால் உட்பட பலர் நடிக்கும் அந்தப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு கும்பகோணத்தில் ஒருவாரம்  நடந்திருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு எப்போது என்று தெரியாமல் படக்குழுவினர் காத்திருக்கிறார்களாம். ஏன் அப்படி? என்றால், புகழ்  மற்றும் இந்தப்புதியபடம் ஆகிய இரண்டின் தயாரிப்பிலும் பின்னணியில் இருப்பது ஒருவர்தானாம். அவர் பணம் கொடுத்தால்தான் படம் எடுக்கமுடியும்.

அவரோ, புகழ் படத்தை முடித்து வெளியீட்டுக்குத் தயாரான பின்னர் இந்தப்படத்தைத் தொடருங்கள், அதுவரை இதன் படப்பிடிப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகத் தகவல். புகழ் படத்துக்கு இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதை முடித்து அதன்பின் இந்தப்படம் என்று காத்திருந்தால் இந்தப்படத்தில் நடிக்கிறவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கலாகிவிடும் என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி படப்பிடிப்பைத் தொடங்கும் முயற்சியில் படக்குழுவினர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்திய வகையிலேயே பலருக்குச் சம்பளபாக்கி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close