Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் ஒரு மகளிர்மட்டும் படம்?

கதாநாயகர்கள் இல்லாமல் படம் எடுப்பது அபூர்வம். இப்போது அப்படி ஒரு முயற்சியை எடுத்துக்கொண்டிருக்கிறாராம் சரத்குமார் நடித்த வைத்திஸ்வரன் உட்பட சில படங்களை இயக்கிய வித்யாதரன்.

கதாநாயகன்தான் இல்லை இப்போது இருக்கும் முன்னணிநாயகியரை நடிக்க வைக்கிறாரா என்றால் அதுவும் இல்லையாம். அம்மா வேடங்களில் புகழ்பெற்றிருக்கும் சரண்யா அவரோடு கோவைசரளா இவர்கேளாடு ஊர்வசியின் அக்கா கல்பனா ஆகிய மூவரையும் முக்கியக் கதாபாத்திரங்களாக வைத்து இந்தப்படத்தை எடுக்கப்போவதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தின் பெயர் இட்லி.

பெயரைப் பார்த்துவிட்டு மூன்றுபெண்களை வைத்துக்கொண்டு ஏதோ உணவு சம்பந்தப்பட்ட கதையைப் படமாக எடுக்கிறார்கள் போலும் என்று நினைத்தால் அதுவும் இல்லையாம். சரண்யா, கோவைசரளா, கல்பனா ஆகிய மூவரின் கதாபாத்திரங்களுடைய பெயரின் முதலெழுத்துகள்தாம் படம் என்று சொல்கிறார்கள். இன்பா ட்விங்கிள் லில்லி என்பது அவர்களுடைய கதாபாத்திரங்களின் பெயர் என்றும் அவற்றின் முதலெழுத்துகளை வைத்தே இந்தப்பெயர் என்றும் சொல்லப்படுகிறது.

படத்தின் கதை மிகவும் சாந்தமானதாக இருக்கும் பெண்கள் சம்பந்தப்பட்ட சிக்கல்களைப் பேசும் என்பதிலும் உண்மையில்லை. இந்தப்படத்தில் ஒரு பரபரப்பான வங்கிக்கொள்ளை நடக்கிறது என்றும் அது எப்படி? அதை யார் செய்தது? என்பது பற்றியும் இந்தப்படத்தில் இருக்கும் என்று சொல்கிறார்கள். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இதைப் பார்க்கும்போது பல ஆண்டுகளுக்கு முன்பாக ரேவதி, ரோகினி, ஊர்வசி ஆகியோர் நடிப்பில் கமல் தயாரித்த  மகளிர்மட்டும் படம் நினைவுக்கு வருகிறது.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close